படம்: சக்கரக்கட்டி
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்: வாலி
பாடியவர்: மதுஸ்ரீ
மருதாணி.. மருதாணி...
மருதாணி விழியில் ஏன்?
அடி போடி தீபாலி
கங்கை என்று கானலைக் காட்டும்
காதல் கானல் என்று கங்கையைக் காட்டும்
வாழும் பயிர்க்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
மருதாணி விழியில் ஏன்?
அடி போடி தீபாலி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல்தான்
நிலையான பாடல்தான்
அலையோசை எந்நாளும் ஓயாது
மருதாணி.. மருதாணி விழியில் ஏன்?
அவன் இதய வீட்டில் வாழும்
அவள் தேகம் வெந்து போகும்
என அவன் அருந்திட மாட்டான்
சுடும் நீரும் சுடும் சோறும்
காதலி கை நகம் எல்லாம்
பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்
ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி
உணரவில்லை இன்னொரு பாதி
(மருதாணி விழியில் ஏன்)
அவள் அவன் காதல் நெஞ்சில்
கண்டாலே சிறு குற்றம்
அவன் நெஞ்சம் தாய்ப்பால் போலே
எந்நாளும் பரிசுத்தம்
ஆத்திரம் நேத்திரம் மூட
பாலையும் கள்ளாய் அவள் பார்க்கிறாள்
ஆகமொத்தம் அவசரக் கோலம்
அவளுக்கிது காட்டிடும் காலம்
(மருதாணி விழியில் ஏன்)
Thursday, December 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment